பார்க் கல்வி குழுமம் – கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைச்சர் திரு. அர. சக்கரபாணி திறப்பு
கோவை 01 ஜூன் : கோவை, திருப்பூர் மற்றும் சென்னையில் 50 ஆண்டுகளாக கல்விச் சேவை செய்து வரும் பார்க் கல்வி குழுமம் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் தங்களது வளாகங்களை கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்காக ஒதுக்கி உள்ளார்கள்.
பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர், முனைவர். அனுஷா ரவி, அவர்கள் கூறும்போது, இந்த பேரிடர் காலத்தில் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமை படுத்தி சிகிச்சை எடுத்துக்கொள்ள போதிய வசதிகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்காக கருமத்தம்பட்டியில் உள்ள அவர்களது கல்லூரி வளாகங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்காக ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தார்.
நேற்று 350 படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையம் கருமத்தம்பட்டியில் உள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் வளாகத்தில் மாண்புமிகு திரு. அர. சக்கரபாணி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த விழாவில் கல்லூரி தலைவர் முனைவர். P.V. ரவி மற்றும் முதன்மை செயல் அலுவலர், முனைவர். அனுஷா ரவி கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முனைவர். அனுஷா ரவி, மக்களின் நலனுக்காக கணியூர் பேரூராட்சி மற்றும் மாதப்பூர் ஊராட்சி மக்களின் வசதிக்காக 30 படுக்கை வசதி கொண்ட இரண்டு மையங்களை கணியூர் பார்க் குளோபல் பள்ளி (CBSE) வளாகத்தில் அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
புகைப்படம் 2
கருமத்தம்பட்டி பேரூராட்சி திமுக நகர செயலாளர் தங்கவேல் அவர்கள்
கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் மருதமலை சேனாதிபதி அவர்கள்
சூலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நித்தியா ஜி மனோகரன் அவர்கள்
முதன்மைச் செயல் அதிகாரி பார்க் கல்வி குழுமம் முனைவர். அனுஷா ரவி அவர்கள்
மாண்புமிகு அமைச்சர் சக்கரபாணி அவர்கள்
கோவை வடக்கு மாவட்டம் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் பிரீமியர் செல்வம், MLA அவர்கள்
Copyright © . Park College of Engineering & Technology. All rights reserved.