NSS Camp @ Unjappalayam 17 May 2022
Posted on June 16, 2022
பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி : தேசிய நாட்டு நலப்பணி முகாம்
பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் தேசிய நாட்டு நலப்பணி (NSS) சிறப்பு முகாம் ஊஞ்சப்பாளையம் கிராமம் கருமத்தம்பட்டியில், 17 May 2022 முதல் 23 May 2022 வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
முகாமின் துவக்க விழா 17 May 2022 அன்று காலை 12 மணி அளவில் ஊஞ்சப்பாளையம் கிராமம் மாதேஸ்வரன் கோவில் மண்டபத்தில் இனிதே நடை பெற்றது.
விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர். மோகன்குமார் அவர்கள் மாணவர்களின் பங்கு, கிராம முன்னேற்றம் பற்றி உரையாற்றினார். மாணவமணிகளின் பொது சேவை, சிந்தனை மற்றும் செயல்பாடு குறித்து கல்லூரி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மேலும் கணியூர் ஊராட்சிமன்ற தலைவர் திரு. வேலுச்சாமி, முன்னாள் தலைவர்.திரு.நடராஜன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
விழாவை தேசிய நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள். முனைவர். குமரேசன் மற்றும் முனைவர். ராஜாராவி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.