கோவை 22 Apr – பார்க் கல்வி குழுமத்தின் கணியூர் வளாகத்தில் விரைவில் நடிகர் விவேக் அவர்களின் பெயரில் “மியாவாக்கி” முறையில் அடர்ந்த காடு அமைக்கப்படும் – முனைவர். அனுஷா ரவி.
பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் 2000 மாணவர்களுக்கு அவர்களது வீட்டில் ஒரு வாரத்திற்குள் ஒரு மரக்கன்றை நட்டு Facebook மற்றும் Instragram யில் மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக #PARKEARTHDAY2021″ என்று பதிவிட்டு சுற்றுசூழலுக்கு துணை நிக்க அழைப்பு விடுத்து, ஒரு சில மரக்கன்றுகளை கணியூர் வளாகத்தில் நட்டு இந்த திட்டத்தினை துவக்கி வைத்தார் முனைவர். அனுஷா ரவி.
பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் அனுஷா ரவி கூறுகையில் உலகம் வெப்பமயமாகுதல் மற்றும் மரங்கள் நடுவதின் முக்கியத்தைப்பற்றி எங்களது கல்லூரியில் நடிகர் விவேக் ஒன்பது வருடங்களுக்கு முன் பேசியது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. அவரது முதற்கட்ட திட்டமான பத்து லட்சம் மரக்கன்றுகள் நடுவதில் பார்க் கல்வி குழுமம் தனது பங்காக 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, நடிகர் விவேக் முன்னிலையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா அவர்களின் கைகளில் வாங்கிய விருதை பெருமையாக நினைவு கூர்ந்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த வருட குடியரசு தின வாழ்த்து மற்றும் “Green Kalam ” திட்ட வெற்றி மேடையில் எடுத்த புகைப்படத்தையும் நடிகர் விவேக்கிற்கு அனுப்பியபொழுது, அவர் எங்கள் வளாகத்தில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் “மியாவாக்கி” முறையில் மரம் நட ஆலோசனை தெரிவித்திருந்தார்.
அவர் இன்று நம்முடன் இல்லை ஆனால் அவரின் நினைவாக எங்கள் வளாகத்தில் “மியாவாக்கி ” முறையில் மரங்களை நட்டு அந்த வனத்திற்கு நடிகர் விவேக் அவர்களின் பெயரை வைப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Photo :
Faculties with Dr. Anusha Ravi, CEO, Park Institutions
Copyright © . Park College of Engineering & Technology. All rights reserved.