கோவையில் தரமான பிக் டாட்டா, டாட்டா அறிவியல் மற்றும் டாட்டா பொறியியல் பயிற்சி வகுப்புகள் கனடா நாட்டின் நிறுவனம் வழங்கும்..
கோவை 18 Oct : கோவை கணியூரில் அமைந்துள்ள ஹுமானிட்டி இன்போடெக் நிறுவனம் மற்றும் கனடா Ai Quest நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் Ai Quest நிறுவனமானது பொறியியல் மாணவர்களுக்கு 1. பிக் டாட்டா 2. டாட்டா அறிவியல் 3. டாட்டா பொறியியல் போன்ற பயிற்சி வகுப்புகளை உயர்ந்த தரத்துடன், குறைந்த கட்டணத்தில் நடத்த உள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹுமானிட்டி இன்போடெக் சார்பாக அதன் நிர்வாக இயக்குனர் முனைவர் அனுஷா ரவி அவர்களும், Ai Quest சார்பாக அதன் இயக்குனர் திரு.ரமேஷ் அவர்களும் கையெழுத்திட்டனர்.
தொடக்கத்தில் இந்த வகுப்புகள் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும். வரும் காலங்களில் இந்த வகுப்புகள் எல்லா மாணவர்களுக்கும் வழங்கப்படும்.