கோவை Nov 15 : வாழ்க்கையில் வெற்றி பெற நாம் கடைபிடிக்க வேண்டிய ஐந்து ‘H’ – திரு. S செல்வநாகரத்தினம் IPS, காவல் கண்காணிப்பாளர், கோவை
கோவை பார்க் கல்வி குழுமத்தில் இரண்டு பொறியியல் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி ஆனது கனியூரில் உள்ள பார்க் பொறியியல் கல்லூரியில் உள்ள கலையரங்கில் 15 Nov அன்று நடைபெற்றது.
பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் டாக்டர் மோகன்குமார் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்.
LMW கோவையின் மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர் செல்வி.மஞ்சு கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.கௌசல்யா கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு மற்றும் ராகிங் செல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் அனுஷா ரவி அவர்கள், நாம் விவசாயிகளை தினமும் மூன்று முறை நினைத்துக் கொள்வோம் ஆனால் பொறியாளர்களை ஒவ்வொரு நிமிடமும் நினைவு கொள்ள வேண்டும். ஒவ்வொரு படைப்பிலும் பொறியாளரின் பங்களிப்பு உள்ளது என்று கூறினார்.
பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் முனைவர் ரவி அவர்களும் மாணவர்கள் பொறியியல் துறையை தேர்வு செய்ததற்காக பாராட்டி பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கோவை காவல் கண்காணிப்பாளர், திரு. S செல்வநாகரத்தினம் IPS அவர்கள் தனது உரையில், ஐந்து ‘H’ பின்பற்றினால் வாழ்க்கையில் நமது இலக்கை அடைய முடியும் என்றார். ஐந்து ‘H’ பின்வருமாறு Hard Work (கடின உழைப்பு), Health(உடல் ஆரோக்கியம்), Habits(நல்ல பழக்க வழக்கம்), Honour (பிறரை மதித்தல்), Humanity(மனிதநேயம்).
பின்பு அவர் மாணவர்களை புகையிலை மற்றும் மது அருந்த மாட்டேன், சாலை விதிகளை கடைபிடிப்பேன், தனது தனிப்பட்ட விவரங்களை இணையத்தில் பகிர மாட்டேன் என உறுதிமொழி ஏற்கச் செய்து உரையை நிறைவு செய்தார்.
முனைவர் ஹரிஹரன் நன்றியுரை நிகழ்த்தினார்
நாட்டுப்பண்ணுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
Photos – From Left to Right
Dr.G Mohan Kumar, Principal, PCET
Thiru. S. Selvanagarathinam IPS, Chief Guest
Dr.P.V.Ravi, Chairman, Park Institutions
Dr. Anusha R, CEO, Park Institutions
Copyright © . Park College of Engineering & Technology. All rights reserved.