கோவை, ஜூலை 12, 2022 –
தமிழ்நாடு பொறியியல் கல்லூரி 1984 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதன் முதலாக துவங்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரி . இந்த கல்லூரியில் 7 இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகளும், 3 முது நிலை பொறியியல் பாடப்பிரிவுகளும் நடைபெற்று வருகிறது.
இதில் கட்டிடவியல் துறை 38 ஆண்டுகளாக சீரும் சிறப்புமாக செயல்பட்டு வருகிறது. கல்லூரியின் மீது கொண்ட பற்றால், கல்லூரியின் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் 2018-22 பருவகாலத்தில் பயின்ற இத்துறை மாணாக்கர்கள் கல்லூரி வளாகத்தில் “I LOVE TCE” என்ற நினைவு சின்னத்தை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த நினைவுச் சின்னத்தை கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் திரு. நித்யா.க.மனோகரன், நகராட்சி துணை தலைவர்.திரு.யுவராஜ் ,கல்லூரி தலைவர் முனைவர் P.V. ரவி, கல்லூரி முதன்மை செயல் அதிகாரி முனைவர் Dr. அனுஷா ரவி, கல்லூரி முதல்வர் முனைவர்.மா.கார்த்திகேயன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
கல்லூரி நிர்வாகத்தினர் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தனர். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்புரை மற்றும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
திறம்பட செயல்பட்ட மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர்களால் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது .
கட்டிடவியல் துறைத் தலைவர் முனைவர் ம. சீத்தாபதி இந்த விழாவினை சிறப்பித்தஅத்துனை நல் உள்ளங்களுக்கும் நன்றி பாராட்டினார்.
Photo from Left to Right
Dr. Anusha Ravi, CEO, TCE
Dr. P.V. Ravi, Founder & Managing Trustee, TCE
Thiru. Yuvaraj, Vice Chairman, Karumathampatti Municipality
Thiru. Nithya G Manoharan, Chairman, Karumathampatti Municipality
Dr. M Karthikeyan, Principal, TCE
Dr. Seethapathi, HOD, Dept of Civil Engineering, TCE
Mr. Palanisamy, Asst Prof, Dept of Civil Engineering, TCE
Copyright © . Park College of Engineering & Technology. All rights reserved.