‘உலக தண்ணீர் தினம்’ – பார்க் தொழிநுட்பக்கல்லூரி
கோவை 22 Mar = உலக மக்கள் அனைவருக்கும் சுத்தமான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ஆம் தேதியன்று ‘உலக தண்ணீர் தினம்’ கடந்த 1993-லிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு தண்ணீர் சிக்கனம் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலக தண்ணீர் தினம் வெவ்வேறு விதமான கருப்பொருளின் கீழ் அணுகப்படுகிறது. அந்த
வகையில் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘Making Groundwater – Invisible Visible’.
இந்த முக்கிய நாளன்று பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள சுற்றுசூழல் பொறியியல் துறையை சேர்ந்த மாணவர்கள்
நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக தண்ணீரை பலூன்களில் பிடித்து அதன் வரலாற்றை கலைநிகழ்ச்சியின் மூலமாக வெளிப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை விளக்கினார்கள்.
இந்த நாளை சிறப்பிப்பிக்கும் விதமாக குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் அனுஷா ரவி அவர்கள் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுடன் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டார்.
நீர்வளத்தை காப்போம் என்ற உறுதிமொழி ஏற்று நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
Copyright © . Park College of Engineering & Technology. All rights reserved.